வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 டிசம்பர், 2011

தமிழ் மொழியை பேச முடியாமைக்கு வெட்கப்படுகின்றேன்: கெஹெலிய


மிழ் மொழியை பேச முடியாமைக்கு வெட்கப்படுகின்றேன் என ஊடக துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி, ஹந்தானை சிவானந்தா தமிழ் வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் பேச முடியுமாயின் எமது பிரச்சினைகளில் அதினம் தீர்ந்து விடும். எனக்கு தமிழ் மொழியில் ஐந்து சொற்கள் பேச முடியுமாயின் இந்நாட்டு குடி மக்களது பெருமை மிகு தந்தைகளில் ஒருவனாக நான் திகழ்வேன். கடந்த 30 வருடமாக நாம் இருள் சூழ்ந்த ஒரு காலக்கட்டத்தில் இருந்தோம். தற்போது ஒளி மயமான ஒரு கால கட்டத்தின் ஆரம்பத்தில் இருக்கின்றோம். எனவே நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின் சகல தரப்பினரும் சமாந்தரமாக முன்னேற வேண்டும். ஒரு தரப்பு பின் நிற்க முடியாது. அப்படியாயின் பெருந்தோட்ட பகுதி கல்வி அபிவிருத்திக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும். அவ்வாறாயின் மட்டுமே ஜனாதிபதியின் இலக்கான ஆசியாவின் சுபீட்சமிக்க நாடாக எமது நாட்டை மாற்ற முடியும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’