வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 டிசம்பர், 2011

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

மீள்குடியேற்றப் பிரதேசங்களான கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு பெற்றுத் தருமாறு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் போக்குவரத்து அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று போக்குவரத்து அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மீள்குடியேறியுள்ள மக்களின் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் இரு மாவட்டங்களுக்கும் போதிய பஸ் வண்டிகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மீள்குடியேற்றப் பிரதேசங்களான முல்லைத்தீவு டிப்போவுக்கு 35 புதிய பஸ்களையும் கிளிநொச்சிக்கு 18 பஸ்களையும் பெற்றுக் கொடுப்பதுடன் கிராமப் புறங்களுக்கான பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இ.போ.ச. இலாப மீட்டும் நிறுவனமாக மாற்றம் பெற வேண்டுமானால் மானியம் வழங்கப்பட்டு பற்றாக்குறையான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சாரதிகள் பஸ் நடத்துனர்கள் மற்றும் அத்துறையின் பொறியியலாளர் களுக்கான வெற்றிடங்கள் பெருமளவில் உள்ளன அவற்றை நிரப்புவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு டிப்போக்களை பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகிறது. வடக்கில் தனியார் போக்கு வரத்தை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தனியார் பஸ் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். இச்செயற்பாடு இடம்பொறததால் பயணங்கள் மிக ஆபத்தானதாக உள்ளன. இது விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ரயில் பாதை நிர்மாணத் திட்டத்தின் கீழ் இது வரை ஓமந்தை வரை பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஓமந்தையிலிருந்து பளை வரையிலான ரயில் பாதை மற்றும் பளையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் போக்குவரத்து அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’