கொழும்பு காக்கைத்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட அந்தோனி ராஜா வேலுப்பிள்ளை என்ற வர்த்தகர் காலணி பட்டியினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவரும் ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டவருமான அந்தோனி ராஜா வேலுப்பிள்ளை (வயது-53) என்பவர் நேற்று மாலை காக்கைத்தீவுப் பகுதி இல- 65 /105 என்ற இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக மோதரை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 4.45 மணிளவில் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண் டதுடன் சடலத்தையும் மீட்டுள்ளனர். இவர் சடலமாக மீட்கப்படும்போது, அவர் வெள்ளை நிற பனியன் மற்றும் சரம் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலையானது கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கும் இடையில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிகக்கபடுகின்றது. கொள்ளுப்பிட்டியில் வசித்து வந்த குறித்த நபருக்கு காக்கைத் தீவிலும் வீடொன்று உள்ளது. அவ் வீட்டின் திருத்தப்ப ணிகளுக்காக கடந்த சனிக்கிழமை அவர் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் வீடு திரும்பாதமையால் அவருடைய மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். எனினும் பதில் கிடைக்காமையால் காக்கைத்தீவு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்போதே குறித்த வர்த்தகர் சடலமாக கிடந்ததை கண்டதுடன் சம்பவத்தை மோதர பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்தே பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இக்கொலைக்கான காரணம் என்னவென இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’