வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 டிசம்பர், 2011

அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு இந்தோனேஷியா கடலில் கவிழ்ந்தது: 200 பேரை காணவில்லை


வுஸ்திரேலியா நோக்கி சுமார் 250 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்றுகொண்டிருந்த படகொன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கவிழ்ந்தபின் 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 30 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
  காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியா கப்பலொன்றையும் விமானமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

இந்த பயண ஏற்பாடு குறித்து விசாரணை செய்வதற்காக அவுஸ்திரேலியா தனது நாட்டுப் பொலிஸாரையும்  அனுப்பிவைத்துள்ளது.

இப்புகலிடக் கோரிக்கையாளர்கள்  ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்படுகிறது.

அளவுக்கதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் இப்படகில் பயணித்ததாலேயே இந்த விபத்து சம்பவித்ததாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’