வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 டிசம்பர், 2011

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும்பங்காற்றி வருகின்றார் - பிரதமர்


கைத்தொழில் துறையை நாடளாவிய ரீதியில் மேம்படுத்தி அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும்பங்காற்றி வருகின்றார் என இலங்கை ஜனநாயக சோலிசக் குடியரசின் பிரதமர் தி.மு.ஜயரட்ண அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சில்ப 2011 விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு யாழ் மாவட்டத்திலிருந்து 22 கலைஞர்கள் வருகை தந்திருக்கின்றார்கள் என்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கைத்தொழில் துறைகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அத்துடன் நாடளாவிய ரீதியில் கைத்தொழில் துறையை மேம்படுத்தி மஹிந்த சிந்தனைக்கமைவாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அமைச்சர் அவர்கள் பெரும்பங்காற்றி வருகின்றார். இவ்வாறான கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதன் ஊடாகவே கிராமியப் பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் அடையும் என தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரம் தோல் மட்பாண்டம் உலோகம் பனை கித்துள் துணி போன்றவற்றால் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு மாகாண ரீதியில் தமது திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு சான்றிதழும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்ட அதேவேளை தேசிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. தேசிய ரீதியில் முதல் இடத்தை சமனாகப் பெற்றுக்கொண்ட இந்திக்க உதயங்கன மற்றும் உதித்த பிரியசமர ரத்னாயக்க ஆகியோருக்கு தங்க விருதும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்ட அதேவேளை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கும் தங்க விருது மற்றும் ஐம்பதாயிரம் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் இன்றைய நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதியமைச்சர் வீரக்குமார திசநாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் தி.மு.ஜயரட்ண அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். பிரதம விருந்தினர் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நினைவுப் பரிசொன்றை வழங்கிக் கௌரவித்ததுடன் பிரதான விருதுகளையும் வழங்கி வைத்தார். இதேபோன்று மாகாண மற்றும் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டோருக்கு பிரதியமைச்சர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட துறைசார்ந்தோர் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் வீரக்குமார திஸாநாயக்க உரையாற்றும் போது மகிந்த சிந்தனைக்கமைவாக சிறுதொழில் மற்றும் கைத்தொழில் துறைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனூடாக நாடளாவிய ரீதியில் குறித்த துறைகள் மேலும் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஊடாக புதிய புதிய தொழில்துறை வல்லுநர்கள் அடையாளங் காணப்படுவதுடன் தொழில்நுட்பத்துடன் கூடியதான உற்பத்திகளும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இன்றைய இந்நிகழ்வில் 393 பேருக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.




























































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’