வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 டிசம்பர், 2011

மும்பையில் அன்னா ஹசாரேவுக்கு கருப்புக் கொடி: நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக குற்றச்சாட்டு!


ன்னா ஹசாரே நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அவருக்கு இன்று மும்பையில் கருப்புக் கொடி காட்டியுள்ளது.
அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் இன்று முதல் 3 நாட்களு்ககு உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு பந்த்ரா பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இன்று காலை 9.45 மணிக்கு அவர் தனது குழுவினருடன் ஜுஹூ கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். அப்போது வழியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அன்னாவுக்கு கருப்புக் கொடி காட்டியது. அன்னா நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதையடும் தாண்டி அன்னா ஜுஹூ கடற்கரைக்கு சென்று காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இன்று காலை 11 மணிக்கு அவர் உண்ணாவிரத்தை துவங்கவிருக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீதான விவாதம் இன்று நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’