வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 டிசம்பர், 2011

தமிழர் பிரச்சினையை இலங்கையில் மட்டுமே தீர்க்க முடியும்


மிழர்கள் பிரச்சினையை இலங்கையால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினையை வேறெந்த உலக நாடுகளாலோ அல்லது வேறு அரசாங்கத்தாலோ தீர்க்க முடியாது எனவும் இலங்கையின் நிலைவரம் தொடர்பாக மலேசிய நாடாளுமன்ற இரு உறுப்பினர்கள் தமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை மிக்க கடுமையாக விமர்சித்த மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.மனோகரன், எஸ். இராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தற்போது தமிழர் விவகாரத்தில் கருணையுடன் நடக்குமாறும், இலங்கை தீவில் வாழும் சிறுபான்மைச் சமூகத்தினரின் ஆசைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதொரு தீர்வை எட்டுமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளனர். சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள் இலங்கை அரசாங்கம் மட்டுமே கவனத்திற் கொள்ள வேண்டும். நாங்கள் உட்பட ஏனைய அனைவரும் இவ்விடயத்தில் இரண்டாந்தரப் பங்களிப்பை மட்டுமே வழங்க முடியும என இந்தியாவிற்கான தமது சுற்றுப்பயணத்தின் முடிவின் போது இருவருக்கும் பொதுவாகக் கருத்துரைத்த மனோகரன் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் தொடரப்பட்ட யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இதில் வெற்றி பெற்றது யார் தோல்வியடைந்தது என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக இனப்போரில் பெரும் துன்பங்களைச் சந்தித்துக் கொண்ட தமிழ்ச் சிறுபான்மையினர் தமக்கு சிறந்த வாழ்வொன்று கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் எனவும் மனோகரன் தெரிவித்தார். யுத்தம் முன்னர் இடம்பெற்ற வலயங்களில் அரசாங்கம் மீள்கட்டுமானப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது. இதனைவிட அப்பிரதேசங்களில் இயல்புநிலை திரும்புவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குவது அத்தியாவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேல் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இராமகிருஷ்ணன் மற்றும் மனோகரன் ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாவர். இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மலேசிய எதிர்க் கூட்டணியில் கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயக செயற்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இவ்விருவரும் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பலரைச் சந்தித்திருந்தனர். முன்னர் இலங்கை விவகாரத்தில் அதிக தலையீடுகளை மேற்கொண்ட இந்தியா, அங்கு வாழும் தமிழர்கள் கௌரவத்துடனும், சம அந்தஸ்துடனும் வாழ்வதற்குகந்த தீர்வை வழங்க வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக வடக்கில் வாழும் பெரும்பாலான சாதாரண தமிழ் மக்கள் மனோகரன் மற்றும் இராமகிருஷ்ண ஆகிய இரு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் குறிப்பிட்டிருந்தனர். இந்தியாவிற்குச் சென்றிருந்த இவ்விருவரும் அரசியற் பிரதிநிதிகள் மற்றும் கல்விமான்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலைந்துரையாடினர். இதன் போதே தற்போது இந்தியா, இலங்கை விவகாரத்தில் தலையிட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவவேண்டும் எனவும் குறிப்பிட்டார். எந்தவொரு யுத்தத்தின் போதும் அங்கு பெரும் பாதிப்புக்கள், அழிவுகள் ஏற்படுவது வழமையே இலங்கையில் நீண்ட காலம் தொடரப்பட்ட இனப்போரில் தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லீம், சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர் என மனோகரன் தெரிவித்தார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் மே 2009 இல் தமிழ்ப்புலிகளை இராணுவம் அழித்ததன் மூலம் நிறைவுக்கு வந்தது. இப்போரில் பங்குபற்றியவர்கள் பங்குபற்றாதவர்கள என பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போரில் யுத்தக் குற்றங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் மனோகரன் தெரிவித்தார். இங்குள்ள பல்லின சமூகங்களின் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய மிக முக்கியமானது எனவும், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவிதமானதாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவ்விரு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து விட்டதால் அந்நாட்டு அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விடயத்தில் அக்கறை எடுக்க வேண்டும் என நாம் கோருகின்றோம். தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்த போதிலும் முரண்பõடுகள் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல என்பதையும் இவ்விடயத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இனங்களுக்கிடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளத் தாம் ஆர்வமாக இருப்பதாக மனோகரன் மற்றும் இராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். இதற்கான தேவைப்பாடுகள் இருந்தால் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் விருப்பம் கொண்டுள்ளோம். இலங்கையில் கடந்த காலத்தில் நிலவிய சில நடைமுறைகள் தொடர்பாகவே நாம் விமர்சித்திருக்கின்றோம். நாங்கள் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளையும் பார்வையிட்ட பின்னர் நாம் தெளிவுபெற்றுள்ளோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’