நேற்றைய மாணவர் ஆர்ப்பாட்டத்தை சில விரிவுரையாளர்கள் தூண்டிவிட்டதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களால் தாக்கப்பட்ட இரண்டு விரிவுரையாளர்களும் கல்விசாரா ஊழியர் இருவரும் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார். இந்த பல்கலைக்கழகமும் மாணவர்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும் உயர் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடந்த சம்பவங்களுக்கு விரிவுரையாளர்களில் ஒரு பகுதியினர் நேரடியாக பொறுப்பானவர்களாக இருந்துள்ளனர். சகல மாணவர் சங்கங்களையும் இடைநிறுத்தம் செய்ய உபவேந்தரும் மன்றமும் எடுத்த தீர்மானத்தை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். மாணவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தால் அவர்களின் பெற்றோர்கள் வீதியில் இறங்குவார்களெனவும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’