வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 டிசம்பர், 2011

நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்: மனித உரிமை அமைப்புகள்


பிரித்தானிய எல்லைமுகவரகத்தின் விமானமொன்றிலுள்ள 50 தமிழ் பயணிகள், இலங்கைக்கு திரும்பியவுடன் சித்திவதைக்குள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்குவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இப்பயணிகளை முறையற்ற விதமாக நடத்துவதாக புதிய ஆதாரங்கள் வெளிவந்த நிலையில் இவ்விமானம் புறப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. சித்திவதை தொடர்பான புதிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பிரித்தானிய அரசாங்கம் தனது நாடுகடத்தல் கொள்கையை மீளாய்வு செய்யத் தவறிவிட்டதாகக் கூறி இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் எனும் அமைப்பு பிரித்தானிய மேல் நீதிமன்றமொன்றில் மனுதாக்கல் செய்திருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரித்த போதிலும், பிரித்தானிய எல்லை முகவரகம் இதுவரை பெரும் அளவிலான நாடுகடத்தல்களை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கைதிகள் முறையற்றவிதமாக நடத்ததப்படுவதற்கான புதிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சித்திரவதையிலிருந்து விடுதலை எனும் லண்டனைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்திருந்தது. எனினும் சர்வதேச பாதுகாப்பு அவசியமில்லை தான் திருப்திகொள்ளும் தனிநபர்களையே தான் நாடுகடத்துவதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளளது. தஞ்சம் கோரும் சில தமிழர்களுக்கு மாத்திரமே பாதுகாப்பு தேவைப்படுவதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது எனவும் அம்முகவரகம் கூறியுள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலர் தமது அரசியல் புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக தமக்குத் தாமே காயம் ஏற்படுத்திக்கொள்வதாகவும் அம்முகவரம் தெரிவித்துள்ளது. இதேவேளை சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் விமர்சித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’