வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 டிசம்பர், 2011

பொலிஸார் நால்வர் விளக்கமறியலில்


நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு விடுமுறைக்கால நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விமான பொறியியல் மாணவர் ஒருவரிடம் பலவந்தமாக 1030 ரூபாவை பெற்றுக்கொண்டமை, அவருடன் இருந்த யுவதியொருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இப்பொலிஸார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நாரஹேன்பிட்டி கிரிமண்டல மாவத்தை சோதனைச் சாவடியில் இக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவகம் ஒன்றிலிருந்து தாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தமது காரை வழிமறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விளக்கமறியலில் வைக்கப்போவதாக அச்சுறுத்தியதாக மேற்படி மாணவர் செய்த முறைப்பாடு செய்துள்ளார். அப்பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் சாரதி ஆசனத்திலிருந்த பணப்பையை எடுத்து அதற்குள்ளிருந்து பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் அம்மாணவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்னர். இந்நால்வரையும் ஜனவரி 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரசன்ன ரணசிங்க உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’