காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் மறுக்கும் நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தான் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று தெரிவித்தது.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்தபோது, அரசாங்கம் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றும்போது, மேற்படி அழைப்பின் நோக்கம் தமது கட்சிக்கு புரியவில்லை எனத் தெரிவித்தார். தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள எந்வொரு அலகிற்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிப்பது குறித்து த.தே.கூட்டமைப்பு ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கரததுத் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாண்பதற்கு உதவுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றார். இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என்ற அறிவிப்பு குறித்து இப்போது கருத்துக்கூறுவது காலோசிதமானது அல்ல எனவும் 'இவ்விடயங்கள் குறித்து நாம் அரசாங்கத்துடன் பேசி என்ன செய்யவேண்டுமெனத் தீர்மானிப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’