வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சகல குற்றச்சாட்டுக்களையும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை கருத்திற் கொள்ளவில்லை: அமெரிக்கா


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சகல குற்றச்சாட்டுக்களும் கருத்திற்கொள்ளப்படவில்லையென அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
'நாங்கள் அந்த அறிக்கை குறித்து கவலையடைந்துள்ளோம். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முழுமையாக கருத்திற்கொள்ளப்படவில்லை ' என அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோறியா நூலன்ட் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். 'இந்த அறிக்கை முழுமையாக இல்லாதபோதிலும், இந்த அறிக்கையின் சகல பரிந்துரைகளையும் நிறைவேற்றுமாறும் இந்த அறிக்கை தவறவிட்டுள்ள பிரச்சினைகளை கருத்திலெடுத்து செயற்படுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் கோருகின்றோம்' என அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள விக்ரோறியா நூலன்ட், அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் இந்த அறிக்கையை இன்னமும் கற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’