2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, இன்று காலை தனது தந்தை கருணாநிதியுடன் சென்று பிரதமரைச் சந்தித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய பின்னர் பிரதமரை கனிமொழி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இன்று காலை பிரதமரை கருணாநிதி சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.
இந்த சந்திப்பின்போது முக்கிய நபராக கனிமொழியும் உடன் இருந்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் விடுதலை தொடர்பாக பிரதமர், சோனியா காந்தியை திமுக தரப்பு பலமுறை சந்தித்துப் பேசியது. இருப்பினும் கோர்ட் மற்றும் சிபிஐயின் நடவடிக்கையில் காங்கிரஸோ, மத்திய அரசோ நேரடியாக தலையிட முடியாது என்று பிரதமர் தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கனிமொழி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்ற கருணாநிதி, கூடவே கனிமொழியையும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’