மார்பகங்களை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரஞ்சுப் பெண்களால் மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கன் உள்ளீடுகளில் குறை காணப்படுவதால், அவற்றை அவர்கள் அனைவரும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதற்கான அறுவைச் சிகிச்சைகளை செய்வதற்கான பணத்தை தமது பொதுச் சுகாதார நிதியில் இருந்து வழங்குவோம் என்று கூறியுள்ள பிரஞ்சு அரசாங்கம், இப்படியான உள்ளீடுகளை மார்பகங்களில் பொருத்திய பெண்கள் அனைவரும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறது. தற்போது திவாலாகிப்போன மார்சையில் உள்ள பி ஐ பி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஆலைகளில் தொழிற்துறை பாவனைக்கானது என்றும், அதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவற்றில் சிலவற்றில் பாதுகாப்புக்காக பூசப்பட்டிருக்கும் முலாம் சேர்க்கப்படாமல் இருந்தது என்றும் கூறப்படுகின்றது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு அந்த உள்ளீடு பழுதடைந்து உடைந்துபோய் விட்டது அல்லது உடைந்து கசிந்தது என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒழிய, அது ஒன்றும் அவசர நடவடிக்கை அல்ல என்று பிரஞ்சு சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அனைத்துப் பெண்களும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரது அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ளது. சிலிக்கன் உள்ளீடுகள் முப்பதினாயிரம் பெண்களுக்கு இவற்றை அகற்றுவதற்கான அறுவைச் சிகிசைகளுக்கான பணத்தை தேசிய சுகாதார பராமரிப்பு முறைமை வழங்கும். இப்படியான மார்பகங்களுக்கு உள்ளீடுகளை பொருத்திய 8 பேர் பிரான்ஸில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அது, இந்த உள்ளீடுகளால்தான் வந்தது என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடையாது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இருந்த போதிலும், இந்த உள்ளீடு வெடித்துக் கசிவதன் மூலம் ஏற்படக்கூடிய உடல் உபாதை மற்றும் வீக்கம் ஆகியவை குறித்து அதிக கவலை வெளியிடப்பட்டிருக்கிறது. இவை குறித்த புலனாய்வுகள் தொடருகின்றன. இந்த உள்ளீடுகள் அகற்றப்பட்ட பிறகு கூட அந்தப் பெண்கள் தொடர்ச்சியாக கிளினிக்குகளுக்கு வந்து முன்னெச்சரிக்கை பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பிரிட்டனில் இந்தவகையிலான உள்ளீடுகளுக்காக நாற்பதினாயிரம் பெண்கள் பணம் செலுத்தியுள்ளார்கள். இந்த பி ஐ பி கம்பனி கடந்த வருடம் திவாலாகிவிட்டதால், அவர்களால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், இந்த உள்ளீடுகளை பிரிட்டிஷ் பெண்களுக்கு பொருத்திய கிளினிக்குகளும், அவற்றை விநியோகம் செய்தவர்களும் இது தொடர்பாக பொறுப்பாக்கப்படலாம். இப்படியான குறையுடைய சிலிக்கன் உள்ளீடுகளை பொருத்திய கிளினிக்குகள் மீது தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக 250 பிரிட்டிஷ் பெண்கள் கூறியிருக்கிறார்கள். இன்று வெளியான இந்த அறிவித்தலை அடுத்து இது குறித்த சட்ட ரீதியிலான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இந்த பி ஐ பி நிறுவனம் தான் திவாலகுவதற்கு முன்னதாக இப்படியான 3 லட்சம் மார்பக உள்ளீடுகளை விற்பனை செய்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே விற்கப்பட்டிருக்கின்றன. அங்கு தமது மார்பகங்களை பெரியதாக காண்பித்துக்கொள்ளும் ஆர்வம் பெண்கள் மத்தியில் அதிகம் என்பதுடன், அங்கு அதற்கான அறுவைச் சிகிச்சை நிலையங்களும் அதிகம். தமது நாட்டில்தான் இப்படியான உள்ளீடுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொலம்பியாவில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். பிரஸிலில் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த விதமான முறைப்பாடுகளும் வரவில்லை என்று கூறப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைமை அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’