வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 டிசம்பர், 2011

உலக எயிட்ஸ் தினம் இன்று


யிட்ஸ் நோயினால் இறந்தோரை நினைவு கூரவும், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நோய் பரவலை தடுப்பதில் ஏற்பட்ட வெற்றிகளை கொண்டாடும் முகமாகமாகவும் உலக எயிட்ஸ் தினம் 1988 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகிறது.
இம்முறை, பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எச்.ஐ.வி தொற்றுதலை பூச்சியமாக்குதல், பாகுபாட்டை பூச்சியமாக்குதல், எயிட்ஸ் தொடர்பான மரணங்களை பூச்சியமாக்குதல் என்பனவே இதன் இலக்காகும். தற்போது உலகில் 3 கோடியே 33 லட்சம் பேர் எயிட்ஸ்நோயைக் கொண்டுள்ளனர் எனவும் இவர்களில் 12 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1981 முதல் 2007 ஆம் ஆண்டுவரை சுமார் இரண்டரை கோடி பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வருட உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில், இந்நோய்க்கு எதிரான போராட்டத்தின் இலக்குகளை வலிமையான அரசியல் உந்துதல், நியாயமான நிதிவளங்கள், உறுதியான மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் அடைய முடியும் எனக் கூறியுள்ளார். எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. தொற்று 1997 ஆம் ஆண்டிலிருந்து 20 சதவீதத்தால் குறைந்துள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட சஹாரா பாலைவனச் சூழல் பிராந்தியத்தில் 22 நாடுகளில் இந்நோய் குறைவடைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் 25 லட்சம் பேர் எயிட்ஸ் தொடர்பான மரணங்களிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த வருட் 700,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. எச்.ஐ.விக்கு எதிரான போராட்டத்தில் இவ்வருடம் தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை 2015 ஆம் ஆண்டளவில் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’