இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களின் நிலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களுக்கு என்ன நடந்தது என அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த அக்குடும்பங்களின் அங்கத்தவர்கள் மேற்படி எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என தெரிவிக்குமாறு கோரியதாகவும் ஸ்ரீதரன் எம்.பி. குறிப்பிட்டார். ஸ்ரீதரன் எம்.பியின் உரைக்கு அரசாங்கத் தரப்பு எம்.பிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’