வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 நவம்பர், 2011

நூறாவது சதத்தை மீண்டும் தவறவிட்டார் சச்சின்



கி ரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு வீரர் நூறு சதம் அடித்தார் என்ற சாதனையை எட்டுவதை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் வெறும் ஆறு ரன்களில் தவறவிட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மும்பையில் இந்தியா விளையாடிவருகின்ற மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாளில், சச்சின் இந்த சாதனையை எட்டுவார் என்று ரசிகர்கல் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் 94 ரன்களில் சச்சின் ஆட்டமிழந்தபோது கூட்டம் நிரம்பி வழிந்த மும்பை அரங்கம் நிசப்தமாகிப் போனது. டெஸ்ட் ஆட்டங்களில் 51 சதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் அடித்துள்ள சச்சின், கடந்த மார்ச் மாதம் முதல் தனது நூறாவது சதத்தை எட்டத் தவறி வருகிறார். இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டெண்டுல்கர் தனது 99ஆவது சதத்தை அடித்திருந்தார். இங்கிலாந்தில் இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் சச்சின் ஏற்கனவே தொண்ணூறு ரன்களைத் தாண்டியிருந்தும் சதமடிக்கத் தவறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 விக்கெட்டும் சதமும் சேர்த்தார் அஷ்வின்

ரவிச்சந்திரன் அஷ்வின்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் அடித்த முதலாவது சதம் இது
சச்சினின் வரலாற்று சிறப்புமிக்க சதம் தவறிப்போயிருந்தாலும், வேறொரு இந்திய வீரர் இந்த ஆட்டத்தில் வேறொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததோடு சதம் ஒன்றும் அடித்திருக்கிறார்.
டெஸ்ட் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் ஒரே இன்னிங்ஸில் சதமும் அடித்து ஐந்து விக்கெட்களையும் எடுத்த சாதனையயை இதற்கு முன் இரண்டே பேர்தான் செய்திருக்கிறார்கள். 1962ல் பாலி உம்ரீகரும், 1952ல் பழம்பெரும் வீரர் வினூ மன்கடும் இந்த சாதனையை செய்திருந்தனர்.
தற்போது மும்பையில் நடந்து வருகின்ற டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 108 ரன்கள் குறைவாக இந்தியா 482 ரன்களை எடுத்தது.
இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களையும் இந்தியா வென்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’