வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 நவம்பர், 2011

கிழக்கு மக்கள் வடக்குத் தலைமைகளுக்கு தலைகுனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது


கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் விகிதாசாரத்தை நோக்கினால் எந்தவொரு இனரீதியான கட்சியினாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாணம் பல்வேறு புறக்கணிப்புகளை அனுபவித்தும் அதைப் புரியாதவர்கள் இன்னும் வடக்கு தலைமைகளுக்கு தலை குனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது என கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் இலங்கை தமிழரசுக் கட்சியினால் தனித்து ஆட்சி அமைக்க முடியுமென்று ஒரு சாராரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஆட்சியமைக்க முடியுமென்று மற்றுமொரு சாராரும் கருதுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் கூறிய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் காலமுள்ளபோதிலும் அடுத்த முதலமைச்சர் தமிழரா? முஸ்லீமா? ஏன்ற சர்ச்சையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவித்துள்ளது. லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சில வாரங்களுக்கு முன்பு கல்முனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கிழக்குமாகாண முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர்வரவேண்டும் அதுவும் லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கல்முனைக்கு நேரில் வந்து அறிவிப்பானாரால் லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமர்சிப்பதில்லை. ஆனால் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் வட மாகாண அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாண மக்களை புறக்கனித்து வந்தனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக முன்னாள் அமைச்சர் செல்லையா இராசதுரை அக்கட்சியின் தலைமைப்பதவிக்கு வர தகுதியிருந்தும் அவர் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார். இதை எமது மக்கள் மறந்துவிடக்கூடாது. அரசியல் ரீதியாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பிரதேச வாதம் என்கிறார்கள். இவ்வாறு சுட்டிக்காட்டுவது தவறா? கிழக்கு மாகாணம் பல்வேறு புறக்கணிப்புகளை அனுபவித்தும் அதைப் புரியாதவர்கள் இன்னும் வடக்கு தலைமைகளுக்கு தலை குனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது. ஒருகாலத்தில் எனது குடும்பமும் தமிழரசுக் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக கல்குடாத் தொகுதியில் விளங்கியது என்பதை பலர் அறிவார்கள் சிலர் அறியாமல் இருக்கலாம். இதனால் எனது குடும்பம் கூட பழிவாங்கப்பட்டது என்று கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’