வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 நவம்பர், 2011

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கையாள வேண்டும்: ஜெயலலிதா


லங்கை அரசாங்கம் தனது கடற்படை வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே மாதம் முதலமைச்சராகப் பதவியேற்ற பின் மத்திய அரசாங்கத்துக்கு எழுதும் தனது ஐந்தாவது கடிதத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் பற்றி மத்திய அரசாங்கம் போதியளவிலான நடவடிக்கை எடுக்காமலிருப்பதால் மீனவர்கள் மனமுடைந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இந்திய மீதான தாக்குதலாக கொள்ளப்படக்கூடியவை. எனவே இதுவொரு தேசிய பிரச்சினையாக கையாளப்பட வேண்டுமெனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் இலங்கை அரசாங்கத்துடன் பேசியபோது, இவ்வாறான நிகழ்வுகள் இனிமேல் இடம்பெறமாட்டாதென இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும் தாக்குதல்கள் தொடர்வது மாத்திரமன்றி மேலும் மேலும் கடுமையாகி வருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். கச்சதீவுக்கு அருகில் நவம்பர் 15ஆம் திகதி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தவறுதலாக கடல் எல்லையை மீறும் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென அறிக்கையில் கூறும் இலங்கை, தனது கடற்படை மேற்கொள்ளும் தாக்குதலையிட்டு மௌனம் சாதிப்பது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜெயலலிதா கோரியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’