வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 நவம்பர், 2011

தருஸ்மன் குழுவை அரசாங்கம் அழைத்திருக்கலாம்: ரொஹான் குணரட்ன



.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் குழுவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைத்திருக்கலாம் என பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரெஹான் குணரட்ன கூறியுள்ளார்.
அவ்வாறு அழைக்கப்படாத நிலையில் அக்குழு இறுதியில் எல்.ரி.ரி.ஈ. சார்பு அமைப்புகளின் தகவல்களினதும் பிரசாரங்களினதும் அடிப்படையிலேயே அறிக்கையை தயாரித்துள்ளது எனவும் அவர் கூறினார். 'இலங்கையின் எதிர்காலம் - மேற்குலக மண்ணில் எல்.ரி.ரி.ஈ.யை எதிர்கொள்ளல்' என்ற தொனிப்பொருளில் கொழும்பு பிரிட்டிஷ் கவுன்ஸிலில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எதிரான எல்.ரி.ரி.ஈ.யின் சர்வதேச வலைப்பின்னலின் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்கவும் மேற்கு நாடுகளில் எல்.ரி.ரி.ஈ. பிரசாரங்களால் மங்கச்செய்யப்பட்ட இலங்கையின் மதிப்பை மீள நிலைநாட்டவும் அந்நாடுகளுடன் நல்லுறவை நிலைநாட்டவும் தொண்டுநிறுவன ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் பிரிவொன்றையும் ஸ்தாபிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 'எல்.ரி.ரி.ஈ.யினால் சர்வதேச ரீதியாக பரப்பப்படும் பொய்யான தகவல்களையும் பிரசாரங்களையும் வெளிவிவகார அமைச்சினால் மாத்திரம் முறியடிக்க முடியாது. இது நாம் செய்த பெரியதொரு தவறு. இப்பிரசாரங்கள் எப்போதும் உண்மையானவை அல்ல. ஆனால் நாம் அவற்றை முறியடிக்க வேண்டும்' என அவர் கூறினார். எல்.ரி.ரி.ஈ.யின் மூன்று முக்கிய ஈர்ப்பு மையங்கள் இருந்தன. முதலாவது பிரபாரகன். அடுத்தது பிரசாரம் மேற்கொள்வதற்கான ஆற்றல், நிதி திரட்டுவதற்கு, ஆயுதம் வாங்குவதற்கான ஆற்றல் மற்றும் விருத்தியடைந்த கப்பல் வலையமைப்பு ஆகியவற்றைக் கொண்ட விருத்தியடைந்த சர்வதேச வலையமைப்பாகும். மூன்றாவது, போரிடுவதில் அவர்களின் விசேட ஆற்றலாகும்' என அவர் தெரிவித்தார். நெடியவன், வண. பிதா இமானுவேல், ருத்திரகுமாரன் போன்றோர் பொய்யான தகவல்களை தமது அமைப்புகள் மற்றும் பிரசார வலையமைப்புகளுக்கூடாக பரப்புவதில் முன்னிற்கின்றனர் என அவர் கூறினார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தை பாதுகாத்தல், நல்லிணக்கத்தை நோக்கி நகர்தல் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அவர் அரசாங்கத்தை கோரினார். எல்.ரி.ரி.ஈ.யினர் பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள், மற்றும் இராணுவ தலைவர்களை கொன்றதாகவும் அக்கொலைகளை வேறெந்த பயங்கரவாத அமைப்பும் செய்வற்றுடன் ஒப்பிட முடியாது எனவும் ரொஹான் குணரட்ன கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’