த மது கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படும் நிலையில், தமக்கு எதிர்க்கட்சி வேண்டும் என அரசாங்கம் கூறுவதன் உண்மை தன்மை குறித்து சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
'இந்நாட்டில் ஜனநாயகம் மோசமாக அழிவடைந்து வருகிறது என்பதை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது' என அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையின்போது அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த ஐ.தே.க. உட்பட எதிர்க்கட்சியினர் மீது அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதல் இதற்கு புதிய உதாரணமாகும். ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கைக்யி கம்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான ராஜபக்ஷ முன்னிலையில் எதிர்க்கட்சி எம்.பிகள் தாக்கப்பட்டனர். இது ஒரு ஜனநாயக நாடு. மாறாக இடி அமீன், பொகாஸா (மத்திய ஆபிரிக்க குடியரசின் முன்னாள் தலைவர்), கேணல் கடாபி ஆகியோரின் பாணியிலான ஆட்சிமுறைமை கொண்ட நாடல்ல' என கரு ஜயசூரிய கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’