அநுராதபுரம், சாலியபுரவில் அமைந்துள்ள ரஜரட்டை பல்கலைக்கழக வைத்திய பீடத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அதிகாரிகளை மாணவர்கள 11 மணி முதல் 2 மணி வரை தடுத்து வைத்ததாக பல்கலைக்கழக ஆவணக்காப்பாளர் ஏ.ஜீ.கருணாரத்ன தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த வேளையில் கறுப்புக் கொடிகள் கட்டி எதிர்ப்பை வெளிக்காட்டிய வைத்திய பீட மாணவர்கள், நிகழ்வு முடிவடைந்து வெளியாக முற்பட்ட போது பிரதான வாயில் கதவை மூடிய தடுத்து வைத்துள்ளனர். தமது பீடத்தில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ பயிற்சிக்கூட கட்டிடத்தின் நிர்மாண பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தினால் தமது பயிற்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை துரிதமாக முடித்து, திறந்து வைப்பதில் உபவேந்தர் உட்பட்ட அதிகாரிகள் அசிரத்தை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட குழுவினர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிர்மாண பணிகள் டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்து திறந்து வைப்பதாக உறுதியளித்ததை அடுத்து தடுத்து வைக்கப்படடிருந்த ரஜரட்டை பல்கலைக்கழக உபவேந்தர் கே.எச். நந்தசேன, ஆவணக்காப்பாளர் ஏ.ஜீ.கருணாரத்ன உள்ளிட்ட அதிகாரிகளை வைத்திய பீட மாணவர்கள் விடுவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’