வருமானத்துக்கு மேலதிகமாக 66 கோடி இந்திய ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட 300 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துள்ளார்
என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வழக்கு விசாரணைக்காக தனது நண்பி சசிகலாவுடன் மூன்றாவது முறையாக இன்று செவ்வாய்க்கிழமையும் நீதிமன்றில் ஆஜரான ஜெயலலிதாவிடம் இன்று கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளடங்களாக அவர் இதுவரையில் ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அத்துடன் மேலும் 450 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டியவராகக் காணப்படுகிறார் என்றும் மேற்படி செய்திகள் குறிப்பிடுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’