வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொன்சேகாவுக்கு 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’