வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 அக்டோபர், 2011

சிறைப்பட்ட இஸ்ரேல் சார்ஜன்ட் விடுதலை


டந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாலத்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் படை சார்ஜன்ட், கிலாத் ஷாலிட், சிறைக்கைதிகள் பரிவர்த்தனை ஒன்றில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடுதலை, காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் , ஹமாஸ் இயக்கத்தினருடன் , இஸ்ரேல் ஏற்படுத்திக்கொண்ட , சிறைக்கைதிகள் பரிவர்த்தனை உடன்பாடு ஒன்றை அடுத்து வருகிறது. இந்த உடன்பாட்டினை அடுத்து, இஸ்ரேலின் சிறைகளில் இருக்கும் சுமார் ஆயிரம் பாலத்தீனக் கைதிகள் இரண்டு கட்டங்களாக விடுதலை செய்யப்படுவர். இதனிடையே, விடுதலை செய்யப்பட்ட இஸ்ரேலியப் படை சிப்பாய், ஷாலிட், இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்டார். அவரை இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம், விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்று, பின்னர் , அவரது குடும்பத்தினரிடம் ஒப்புவிக்கப்படுவார். ஷாலிட், அவர் தடுத்துவைக்கப்பட்டதிலிருந்து முதன் முறையாக, அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். அவர் ஸ்திரமான உடல் நலத்துடன் இருக்கிறார் என்று இஸ்ரேல் கூறியது. தான் தடுத்துவைக்கப்பட்டபோது, தனியாக உணர்ந்ததாகவும், ஆனால், என்றாவது ஒருநாள் தான் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும் சார்ஜன்ட் ஷாலிட் எகிப்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். தனது விடுதலை பாலத்தீன மற்றும் இஸ்ரேலியர்களுக்குமிடையே ஒரு நாள் அமைதி ஓப்பந்ததுக்கு வழிவகுககும் என்று நம்புவதாக அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’