முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகார பணிப்பாளர் நாயகமுமான அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர அவர்களது இறுதிக் கிரியைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் ஹொலன்னாவ நகர மைதானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. இதன் போது பிரதமர் டி.எம்.ஜயரத்ன அமைச்சர்களான பசில் ராஜபக் தினேஸ் குணவர்தன பீலிக்ஸ் பெரேரா சுசில் பிறேமஜயந்த, மைத்திரிபால சிறிசேன ராஜித சேனாரத்ன சிரேஸ்ட அமைச்சர்களான எ.எச்.எம் பௌசி எஸ்.பி.நாவின்ன பியசேன கமகே, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவிற்கு தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர். வண.மாதுருவாவே சோபித்த தேரர், மௌலவி கலிலூர் ரஹ்மான் ஆகியோரது இரங்கலுரைகளைத் தொடர்ந்து ஜனாதிபதியின் இரங்கலுரையும் தொழிற்கட்சித் தலைவரின் இரங்கலுரையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்காவினது இரங்கலுரையும் வாசிக்கப்பட்டதுடன் பிரதமர் அமைச்சர்களான சுசில் பிறேமஜயந்த மைத்திரிபால சிறிசேன ஆளுநர் அலவி மௌலான பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர். அமரரின் குடும்பம் சார்பில் அவரது புதல்வி சிருனிகா பிரேமச்சந்திர மகன் அசேல பிரேமச்சந்திர ஆகியோர் உரை நிகழ்த்தினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவினது பூதவுடலை சிதை வரை தூக்கிச் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’