போதைப் பொருள் போன்ற சட்டவிரோத மதுபாவனையால் கொழும்பு நகரை சூழ உள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டெடுக்க கலால் திணைக்கள அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். 
கலால் திணைக்கள செயற்பாட்டாளர்களின் சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற விஷேட நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். 
இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கூறுகையில்: சட்டவிரோத போதைப் பொருள் பாவனையாளர்களினால் கொழும்பு வாழ் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களை இந்நிலையிலிருந்து மீட்க விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 
இதற்காக கலால் திணைக்கள அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றார். 
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’