வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 அக்டோபர், 2011

சச்சினை யார் என்று தெரியாமல் விழித்த வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள்


F1 எஃப் 1 கார் பந்தயத்துக்கு சென்ற சச்சின் டெண்டுல்கரை போட்டி அமைப்பாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கிருந்து நேரடியாக கார் பந்தயம் நடைபெறவிருந்த மைதானத்துக்குள் சென்றார் சச்சின். அவரின் வருகையை அறிந்த இந்திய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும், கேமரா மேன்களும் அங்கு விரைந்தனர். ஆனால்
அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோருக்கு சச்சினை யார் என்றே தெரியவில்லை. இதனால் சச்சினை நோக்கி செய்தியாளர்கள் ஓடியதை வியப்புடன் பார்த்த ஸ்பெயின் பத்திரிகையாளர் ஒருவர், இவர் யார்? எல்லோரும் ஏன் இவர் பின்னாடி செல்கிறீர்கள்? இவர் என்ன பெரிய பணக்காரரா? என்று இந்திய பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அவர், இவர்தான் சச்சின், கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. அதனால்தான் அவர்களால் சச்சினை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. சச்சின் ஒரு கால்பந்து வீரராகவோ, கார் பந்தய வீரராகவோ இருந்திருப்பாரானால் நிச்சயம் அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஸ்பெயின் போன்ற நாடுகளில் கால்பந்து, டென்னிஸ்,கார் பந்தயம் போன்றவற்றுக்குத்தான் நல்ல வரவேற்பு உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’