வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 அக்டோபர், 2011

பால்ய வயது திருமணங்களை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?: இலங்கையும் ஏனைய நாடுகளும்


முஸ்லிம்கள் தமது பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமடைந்ததும், சிறிய வயதிலேயே மணம் முடித்துக் கொடுத்து விடுகிறார்கள். படிக்கும் வயதிலேயே மணம் முடித்துக் கொடுத்து விடுவதா? என்றெல்லாம் ஏனைய இனத்தவர்கள் அங்கலாய்ப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
அண்மையில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பழகிய மாற்று மத விரிவுரையாளர் ஒருவரை நீண்ட கால இடைவெளியின் பின் தலைநகரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பால்ய வயது திருமணம் தொடர்பாக, குறிப்பாக இஸ்லாமிய கோட்பாடுகளைப் பற்றி என்னிடம் வினவினார். உங்கள் நபிகள் நாயகம் அவர்கள் ஆறு வயதான ஒரு சிறு பிள்ளையைத் திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்களே, பள்ளிவாசல் வேலை செய்யும் ஒருவர் என்னிடம் சொன்னார். இது உண்மையா? என்று வினவினார். நான் அவருக்கு விரிவான விளக்கமளித்து தெளிவுபடுத்தினேன். உண்மையில் மாற்று மத சகோதரர்கள் இப்படித்தான் அறிந்து வைத்திருக்கிறார்கள். புனித குர்ஆனில் நிக்காஹ் பற்றிக் கூறப்பட்டுள்ளமையினாலேயே வயது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. பால்ய திருமணம் பற்றிக் கூறும் எந்த ஏற்பாடுகளும் இல்லை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து சந்ததிகளை உருவாக்குவதற்கும் , ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்துவதற்குமான ஒரு ஒப்பந்தமே திருமணம் என்று குர்ஆன் விளக்கியுள்ளது. இதனைக் கொண்டு குர்ஆன், இஸ்லாம் பால்ய திருமணத்துக்கு அனுமதியளித்துள்ளது எனப் பொருள் கோடல் செய்வது தவறாகும். பால்ய வயது திருமணம் தொடர்பில் உலமாக்களிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. புனித திருக்குர் ஆனின் 65 ஆவது சூறா 4 ஆம் திருவசனத்தில் பருவ வயதையடையாத பெண் பிள்ளையின் திருமணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என சில உலமாக்கள் வாதங்களை முன் வைக்கின்றனர். குறிப்பிட்ட 65 ஆவது சூறா 4 ஆம் திருவசனம் என்ன கூறியிருக்கிறது என்பதை நாம் மிகவும் உன்னிப்பாக கவனத்திற் கொள்ள வேண்டும். தலாக் சொல்லப்பட்ட பெண்களின் மாதவிடாய் காலத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களின் இத்தா காலம் மூன்று மாதங்களாகும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவி காலம் மூன்று மாதங்களாகும் என்று குர் ஆன் வசனம் தெரிவிக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டி பருவம் அடையாத பெண்களும் திருமணம் செய்ய முடியும் என உலமாக்கள் தெரிவிக்கின்றனர். தாம் சொல்லப்பட்ட பெண்கள் இத்தா காலத்தைப் பூர்த்தி செய்தபின்பே மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனம் உண்மையிலேயே மாதவிடாய் ஏற்படாத பருவ வயதையடையாத பெண்களை கருதாமல் மாறாக வேறு ஏதாவது உடலியற் காரணங்களுக்காக மாதவிடாய் ஏற்படாத பெண்களைக் கருதியிருக்கலாம் என மொஹமத் அஸாம் எழுதியுள்ள THE MESSAGE OF THE QUARAN இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலமா மௌலானா உஸ்மானி தமது காரசாரமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். பால்ய திருமணத்தை ஆதரிப்பவர்கள், இது தொடர்பாக ஆதரவான விமர்சனங்களை வெளியிடுபவர்கள், உடலுறவு எதுவும் நடைபெறாத போது விவாகரத்துச் செய்யும் சந்தர்ப்பத்தில் இத்தா அனுசரிக்கத் தேவையில்லை என புனித குர் ஆன் கூறியுள்ளதை கவனத்திற் கொள்ளத் தவறிவிட்டனர். இத்தா, உடலுறவு நடைபெற்றிருக்கக் கூடிய சாத்தியம் எனும் விடயத்தில் மாத்திரமே தங்கியுள்ளது என்ற கருத்தை ஆதரிப்பவர்கள், மாதவிடாய் ஏற்படக்கூடிய வயதையடையாத ஒரு பெண் பிள்ளையுடனான உடலுறவு எனும் விடயம் பற்றியும் நிச்சயம் சிந்திக்க வேண்டும். புனித குர் ஆன் இத்தகைய உடலுறவுக்கு எப்படி அனுமதி வழங்கும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களின் திருமண வயது, அவர்கள் திருமணம் செய்யும் போது வயது ஆறு என்றே பெரும்பான்மையானோர் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்த போது அவர்களின் வயது ஆறு அல்ல பதினாறு அல்லது பதினேழாக இருக்க வேண்டும் என்பதையும் உலமா மௌலானா உஸ்மானி நிரூபிக்க முயற்சித்துள்ளார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னாவும் கூட பால்ய திருமணத்தை அனுமதிக்கவில்லையென்பது இதிலிருந்து தெளிவாகிறது. பால்ய திருமணத்தை ஆதரித்து கருத்துக்களைத் தெரிவிக்கும் உலமாக்கள் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இவ்விடயம் தர்க்க ரீதியானதாகவும், எது சரியென்று அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டக் கூடியதொன்றாகும். புனித குர் ஆனுக்கும், சுன்னாவுக்கும் செல்வாக்கு வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் இப்பால்ய திருமணம் இஸ்லாத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்வாக இருந்திருக்கலாம். ஆனால், குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மதிப்பளிக்கும் இக்கால திட்டத்தில் பால்ய திருமணத்தை நியாயப்படுத்துவது அவசியமற்ற ஒரு விடயமாகும். பால்ய திருமணத்தை ஆதரித்தும் பேசும் உலமாக்கள் பால்ய திருமணத்தில் இணையும் சிறுமி தொடர்பாக அவளது தகப்பன் எடுக்கும் தீர்மானத்தில், அச்சிறுமிக்கு வயது வந்த பின் என்ன நடக்கும் என்பதைப் பற்றி வலியுறுத்திக் கூறவில்லை. ஒரு சிறுமிக்கு அவளது பால்ய வயதில் அவளது வலி அல்லது திருமணப் பாதுகாவலர் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தால், அச் சிறுமி வயது வந்ததும் அத்திருமணத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, மறுப்பதற்கோ அவளுக்கு உரிமையுண்டு. அவளது இந்த உரிமை பூரணத்துவம் வாய்ந்ததாகும். இந்த விடயத்தில் அவளது தகப்பனோ, உறவினர்களோ எவரும் தலையிட முடியாது. ஒரு முஸ்லிம், தான் பால்ய வயதையடையாத நிலையில், தனது திருமணம் பாதுகாவலர் மூலம் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தால், அம் முஸ்லிம் பரõய வயதையடைந்ததும், அத்திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிக்கும் உரிமை அம் முஸ்லிமுக்கு உண்டு என ஏ.ஏ. பைஸி எழுதியுள்ள "OUTLINE OF MUHAMMADAN LAW'' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே பால்ய திருமணம் ஒன்று சந்தர்ப்பவசத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட பருவ வயதையடைந்ததும் அப்பெண்ணின் திருமணம் தொடர்பான உரிமைகள் இஸ்லாமிய சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது. 1990 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்கான சர்வதேச பிரகடனத்தின் பிரகாரம், 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாகவே கருதப்படுவர். ஆனால் அச்சிறுவர்கள் ஆளப்படும் கட்டத்தில், பராய வயது 18 ஐ விடக் குறைவானது எனக் கருதப்பட்டால், அவர்கள் அச்சட்டத்தின் பிரகாரமே ஆளப்படுவார்கள். திருமணத்திற்கõன வயதெல்லை, திருமணப் பதிவு, திருமணத்திற்கான சம்மதம் என்பவற்றின் மீதான சர்வதேச பிரகடனம் (1964) பின்வருமாறு தெரிவிக்கிறது. இப்பிரகடனத்தினால் ஆளப்படும் திறந்தவர்கள், திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையைத் தீர்மானிப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு தீர்மானிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை விடக்குறைவான வயதுடையவர்களில் திருமணம் சட்ட வலிதுடைமையானதாகாது. ஆனால் மிகவும் பாரதூரமான காரணங்களின் மீது, சம்பந்தப்பட்ட திறத்தவர்களின் மீதான நன்னோக்கின் அடிப்படையில் ஒரு அதிகாரபூர்வமான சபையின் அனுமதியுடன், இச் சட்டம் தளர்த்தப்படலாம். நாட்டுக்கு நாடு திருமணம் செய்து கொள்வதற்கான வயதெல்லை வேறுபடுகின்றன. வயதெல்லைகள் சட்டங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், சில நாடுகளில் விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. துருக்கி நாட்டில் பெண்களுக்கான திருமண வயதெல்லை 15 வயதிலிருந்து தற்போது 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களை முன் வைத்து இவ்வயதெல்லையை 18 வயதிலிருந்து 16 வயதாகக் குறைக்கலாம். பிஜி நாட்டில் ஆண், பெண் திருமண வயதெல்லை 21 ஆகவே இருக்கிறது. வயது 21 க்கும் குறைவு என்றால் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் அவசியமாகும். 16 வயதுக்குக் கூடிய பெண்ணிற்கும், 18 வயதுக்குக் கூடிய ஆணிற்கும் பெற்றோர் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி திருமணத்திற்கு அனுமதி வழங்க மறுத்தால், அனைவரையும் விசாரணை செய்த பின்னர் மாஜிஸ்திரேட்டின் எழுத்து மூல அனுமதியுடன் திருமணம் செய்யலாம். டியுனிசீயாவில் பெண்ணின் திருமண வயதெல்லை 17 ஆகவும், ஆணின் திருமண வயதெல்லை 20 ஆகவும் இருக்கிறது. இந்தத் திருமண வயதெல்லை இரு திறத்தவர்களினதும் நன்னோக்கின் அடிப்படையில், இரு திறத்தவர்களினதும் பாதுகாவலர்களின் அனுமதியுடன், அல்லது நீதிமன்ற அனுமதியுடன் குறைக்கப்படலாம். உஸ்பெகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கான திருமண வயதெல்லை 17 ஆகவும், ஆண்களுக்கான திருமண வயதெல்லை 18 ஆகவும் இருக்கிறது. விஷேட சந்தர்ப்பங்களில் உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதியுடன் இவ்வயதெல்லைகள் ஆகக் கூடியது ஒரு வருடத்தினால் குறைக்கப்படலாம். பாகிஸ்தானில் பெண்ணின் திருமண வயதெல்லை 16 ஆகவும், ஆணின் திருமண வயதெல்லை 18 ஆகவும் அமைந்துள்ளது. 16 வயதினை அடைந்த பெண்களுக்கு திருமணத் தேர்விற்கான உரிமையுண்டு. ஒரு பெண் 15 வயதுடையவளாக இருந்தாலும் கூட திருமணத்திற்கான சம்மதம் தெரிவித்தலைப் பற்றிய அறியும், தெளிவும் உடையவளாக இருந்தால் திருமணம் செய்யலாம். 16 வயதுக்குக் குறைந்த பெண்களின் திருமணம் சட்டத்தின் பிரகாரம் குற்றமாக இருந்தாலும் அவள் பராய வயதையடைந்தவளாயின் அத் திருமணம் வலிதானதாகும். கம்பியாவில் திருமண வயதெல்லை பெண்களினதும், ஆண்களினதும் 21 வயதாகவே இருக்கிறது. இருவரில் ஒருவரேனும் 21 வயதுக்குக் குறைவானவராக இருந்தால் பெற்றோரின் அனுமதி அவசியமாகும். எகிப்து நாட்டில் திருமண வயதெல்லை பெண்ணுக்கு 16 வயதாகவும், ஆணுக்கு 18 வயதாகவும் இருக்கிறது. பராய வயதையடையாதவர்களின் திருமணத்திற்கு வலி அவசியமானதாகும். வலி நியாயமின்றி திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்தால் நீதிபதி அனுமதி வழங்குவார். மலேசியாவில் சில பிரதேசங்களில் திருமண வயதெல்லை பெண்ணினது 16 வயதாகவும், ஆணினது 18 வயதாகவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பராய வயதையடையாதவர்களின் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் தனி அதிகாரம் ஷரீஆ நீதிபதிக்கு உண்டு. கேமடூனில் பெண்ணின் திருமண வயதெல்லை 15 ஆகவும் ஆணின் திருமண வயதெல்லை 18 ஆகவும் இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட வயதெல்லைக்குக் குறைந்தவர்கள் நாட்டின் தலைவரினாலும், பெற்றோரின் அனுமதியுடனும் திருமணம் செய்யலாம். தஜிகிஸ்தானில் ஆணினதும், பெண்ணினதும் திருமண வயதெல்லை 17 ஆக இருக்கிறது. பெண் கர்ப்பம் தரித்திருத்தல், பெற்றோர் இல்லாமலிருத்தல் போன்ற விதி விலக்கான சந்தர்ப்பங்களில் இவ்வயதெல்லை ஆகக் கூடியது ஒரு வருடத்தினால் குறைக்கப்படலாம். செனகல் நாட்டில் பெண்ணினது திருமண வயதெல்லை 16 ஆகவும் ஆணினது திருமண வயதெல்லை 20 ஆகவும் அமைந்துள்ளது. இக் குறிப்பிட்ட வயதெல்லையிலும் குறைவான வயதிலுள்ளவர்களுக்கு தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் (பெண் கர்ப்பம் தரித்தல்) நீதிபதி அனுமதி வழங்கலாம். இதற்கு விசாரணையும், பெற்றோரின் சம்மதமும் அவசியமாகும். இவ் வயதுக்குக் குறைந்தவர்களின் திருமணத்தைப் பெற்றோர்கள் ????முடியும். ஆனால் உரிய வயதையடைவதற்கு முன்னரே பெற்றோரின் உட்கிடையான அல்லது வெளிப்படையõன சம்மதம், திருமணம் நடைபெற்று ஒரு வருடத்திற்கு மேலாகப் பெற்றோர் எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருத்தல், திறத்தவர்களுக்கு 19 வயதான பின்னர் ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்தல் என்பன பெற்றோரின் உரிமைகளைச் செல்லுபடியற்றதாக்கும். இலங்கையில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தெளிவாக விளக்கியுள்ளது. எமது நாட்டிலுள்ள பொதுவான சட்டம் பெண்களின் திருமண வயதெல்லை 18 வயது என்று வரையறுத்துள்ள நிலையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 12 என்றே வரையறுத்துள்ளது. 12 வயதுக்கும் குறைந்த பெண்களின் திருமணம் பதிவு செய்யப்படக் கூடாது என்று தெரிவித்துள்ள அதேவேளை 12 வயதுக்கு குறைவான ஒரு பெண் திருமணப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனில் அவள் வசிக்கும் பிரதேசத்து காதி நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். காதி நீதிபதி விசாரணை ஒன்றினை நடாத்தி திருமணப் பதிவுக்கு அனுமதியளித்தால் மாத்திரமே பதிவு செய்யப்பட வேண்டும். முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டம் இவ்வாறு தெரிவித்திருந்தாலும் எமது நாட்டில் 12 வயதுக்கும் குறைந்த முஸ்லிம் பெண்களின் திருமணப் பதிவு நடைபெறுவது அரிதாகவே காணப்படுகிறது. இஸ்லாத்தில் திருமணம் செய்ய வயதெல்லை எதுவும் வரையறுத்துக் கூறப்படவில்லை. இஸ்லாம் ஒரு ஆண் அல்லது பெண் திருமண ஒப்பந்தத்தில் இணைய வயதுக் கட்டுப்பாடு எதனையும் முன் வைக்கவில்லை என்றாலும் ஆய்வாளர்கள் திருமண பந்தத்தில் இணைபவர்கள் அதற்கு சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று நிபந்தனையாகும் என்று கூறுகின்றனர். ஷாபிஈ மத்ஹபின் முக்கிய நூல்களில் ஒன்றான துஹ்பதுல் முஹ்தாஜ் எனும் நூலில் இந்த விடயம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இல்லற வாழ்விற்கு சக்தி பெறாத சிறிய, நோயுள்ள, மெலிந்த பெண் பிள்ளை அவளுடன் இல்லற வாழ்வைத் தொடர்வதற்கு ஏற்பட்டிருக்கும் தடை நீங்கும் வரை அவள் ஒப்படைக்கப்படமாட்டாள். அவர்களை ஒப்படைப்பது வலி க்கு மக்×ஹ் ஆகும். எனவே ஒரு பெண்ணை இல்லற வாழ்விற்கு ஒப்படைக்கு முன் அவள் இதற்கு சக்தி பெற்றவளா என்பதைக் கவனிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு அனுமதியளிப்பது தான் அவர்களது பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பாக இருக்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டு இஸ்லாம் தடைகளை விதிக்கவில்லை. நோயாளியான, வாரிசுகள் இல்லாத ஒருவர் தனது மரணத்திற்கு முன்பு தனது மகளை நல்ல ஒருவரிடம் மனைவியாக ஒப்படைக்க நினைக்கின்றமை, ஒரு விதவைப் பெண் தனக்கு வாழ்வதற்கு வசதியில்லாத நிலையில் தனது பெண் குழந்தையை பராமரிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றமை இதனால் தனது சிறிய பெண் பிள்ளையை திருமணம் செய்து வைத்து அவளது மகிழ்வான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்ய நினைக்கின்றமை போன்ற காரணங்களைக் கருத்திற் கொண்டு இஸ்லாம் திருமண வயதெல்லையை வரையிட்டுக் கூறவில்லை எனலாம். ஏ.ஆர்.ஏ. பரீல் B.A.(Hons)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’