வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 அக்டோபர், 2011

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்தவின் அறிவுரை


சிய பசுபிக் பிராந்திய நாடுகளே உலக பொருளாதாரத்துக்கு ஆதாரமாகவுள்ளதனால் முன்னேறிய நாடுகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமென கூறியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்ச்சியடைந்த நாடுகளை கிண்டலடித்துள்ளார்.
பேத் நகரில் பொதுநலவாய வணிக அரங்கத்தில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னேறிய நாடுகளின் தலைவர்கள் அவர்களது நிதிச்சந்தைகள் தள்ளாட்டம் கண்டுவரும் பிரச்சினை தொடர்பாக காலம் பிந்திய நிலையில் அற்பசொற்ப நடவடிக்கைகளையே எடுத்துள்ளனரென கூறினார். முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் வேலையின்மைப் பிரச்சினை அரசியல், பொருளாதார கலங்களை தோற்றுவித்துள்ளதாக அவர் கூறினார். இந்த நிலைமை தொடருமாயின் மிகவும் மோசமான அரசியல் பிரச்சினைக்கு இட்டுச்சென்று உலக பொருளாதார உறுதிப்பாட்டை மேலும் குழப்பிவிடுமென ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்கள் சரியான மாற்று நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இல்லாதுவிடின் நிலைமை மோசமடைந்து மீளமுடியாத வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லுமென அவர் கூறினார். அடுத்த உச்சிமாநாடு நடைபெறவுள்ள இலங்கை, கடந்த ஆறு வருடங்களாக நம்பிக்கையை பேணிவருவதில் வெற்றி கண்டுள்ளது. நாம் உறுதியான அரசியல் பின்னணியை வழங்கியதாலேயே இது சாத்தியமாகியதென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நடந்த வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் 22 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோமென அவர் கூறினார். 8 சதவீதமாக இருந்த வேலையின்மை 4.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 28 சதவீதமாக இருந்த பணவீக்கம் 6 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதென அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’