வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 அக்டோபர், 2011

முஸ்லிம் வியாபாரிகளுக்கு வசதிகள்

தீபாவளி தினத்தை முன்னிட்டு முஸ்லிம் வியாபாரிகளுக்கு நகரப் பகுதியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌவி சுபியான் விடுத்து கோரிக்கைகளுக்கு அமைய அது விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ் நகரப் பகுதியில் நிரந்தர மற்றும் தற்காலிக வியாபாரிகளுக்கு மாநகர சபை இட ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் தற்போது புத்தளத்திலிருந்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள மற்றும் குடியேறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் வியாபாரம் செய்வதற்கேற்ப இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டுமென சுபியான் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையினை ஆராய்ந்த அமைச்சர் தாம் அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு இது விடயம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இதன்போது ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் இளங்கோ (றீகன்) ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் மற்றும் மாநகர சபை ஆணையாளர் சரவணபவ மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’