வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 அக்டோபர், 2011

எமது சமூகத்தின் வளர்ச்சி சிறார்களின் நிறைவான வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

மது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது தற்போதுள்ள சிறார்களின் நிறைவான வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (8) கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தம் எமது சமூகத்தின் இளம் தலைமுறையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியின் தாக்கம் அடுத்து வரும் பத்தாண்டுகளில் எம் சமூகத்தின் இனவிருத்தியில் நன்றாகவே புலப்படும். எனவேதான் எதிர்கால எமது சமூகம் தலை நிமிர்ந்த அபிவிருத்தி அடைந்த சமூகமாக மிளிர வேண்டுமென்றால் தற்போது வட மாகாணத்தில் உள்ள நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்பள்ளி சிறார்களை சிறந்த கல்விமான்களாக நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர் உள்ளிட்ட எம் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் பசுமரத்து ஆணிபோன்று பதிகின்ற சிறார்களின் மனங்களில் இன்றிலிருந்தே நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும். அதனூடாக நல்ல ஒழுக்கமுள்ள சமூதாயமாக அவர்களை வளர்த்தேடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்தோடு இந்த மாவட்டத்தில் நிறைவான வளங்களுடன் ஒரு முன்பள்ளியினை பெற்றுள்ள இப்பிரதேசம் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அருட்ச் சகோதரி மாசில்லா குருஸ் தலைமையில் நடந்த நிகழ்வில் புனித பற்றிமா பாடசாலையின் முதல்வர் அருட்ச்சகோதரி அன்ரனிற்றா மார்க் கிராம சேவையாளர்களான திருமதி சாரதா சுந்தரலிங்கம் திரு. சிம்சன்போல் அக்கராயன் மகாவித்தியாலய அதிபர் திரு கண்ணவுரான் மற்றும் அருட்சகோதரிகள் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’