வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 அக்டோபர், 2011

கட்சியின் தனித்துவத்தை நிலைநிறுத்திய ஆதரவாளர்கள் : ஹக்கீம் பாராட்டு


ல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உதவியதன் ஊடாக மீண்டும் அங்கு கட்சியின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். அத்துடன் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னர் வெற்றி பெற்ற ஆசனங்களை கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு மூன்றாம் கட்டமாக நடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்திருப்பதாவது, நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும் கட்சியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபையை எமது கட்சி கைப்பற்றுவதற்கு உன்னதமான பங்களிப்பைச் செய்துள்ளமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறே கட்சி போட்டியிட்ட ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆசனங்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவிய வாக்காளர்களையும் நாம் பெரிதும் மதிக்கின்றோம். கல்முனையைப் பொறுத்த வரை மாநகரின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் செயலாற்றும். கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, மாத்தளை ஆகிய மாநகர சபை தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பு மாநகர சபையில் உறுப்பினர்கள் இருவரைப் பெற்று ஓரளவு பின்னடைவைச் சந்திக்க நேர்ந்துள்ள போதிலும் கொழும்பின் சில பகுதிகளில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அண்மைக் காலமாக நிலவி வரும் பீதி மனப்பான்மையின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கின்றது. அந்த மக்கள் எதிர்நோக்கும் அச்சம் சந்தேகம் என்பன பற்றி போதியளவு தெளிவுபடுத்தப்பட்டு அவற்றைக் களைவதற்குரிய வழிவகைகளில் மேலும் கூடுதலான கரிசனையும், கவனமும் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது எமது அபிப்பிராயமாகும். ஜனாதிபதி மிகவும் தெளிவான நம்பிக்கையூட்டக் கூடிய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். கட்சியின் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு உறுதுணையாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’