2012ஆம் ஆண்டுக்கான வரவசெலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2012ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு மதிப்பீட்டு அறிக்கை இந்த மாதம் 18ஆம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான உத்தேச செலவு 2220 பில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கான மூலதனச் செலவு 1111 பில்லியன் ரூபாவாகும். கடந்த வருடம் இது 938 பில்லியன் ரூபாவாக இருந்தது.
அதேவேளை 2012 ஆம் வருடத்திற்கான உத்தேச வருமானம் 1115 பில்லியன் ரூபாவாகும். வளர்ச்சி வீதத்தை 8 சதவீதமாக பேணுவதற்காக 2012 ஆம் ஆண்டுக்கான அரச முதலீடு 541 பில்லியன் ரூபாவிலிருந்து 553 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’