வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 அக்டோபர், 2011

2013 இற்குமுன் மனித உரிமைகள் நிலைவரம் முன்னேற வேண்டும்: இலங்கையிடம் பிரிட்டன் வலியுறுத்தல்


2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பகிஷ்கரிப்புகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக இம்மாநாட்டிற்கு முன்னர் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் இலங்கையை இன்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் 22 ஆவது மாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று நிறைவடைந்தது. அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சிவில் யுத்தம் முடிவடைந்ததையடுத்து கொழும்பு அரசாங்கம் தன்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின்போது தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாகவும் டேவிட் கெமரோன் கூறினார். இலங்கையில் பொதுமக்களை படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தும், ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் அறிக்கையை பொதுநலவாய மாநாட்டில் கனடா எழுப்புவதை தான் தடுத்து நிறுத்தியாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கலாம் என்பது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், 'நான் கனேடியர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். நாமும் ஒரேமாதிரி பார்வையையே கொண்டிருக்கிறோம் என எண்ணுகிறேன். அதாவது தமிழ் புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து நல்லிணக்கத்திற்காக மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அதிகம் செய்வதை நாம் பார்க்க விரும்புகிறோம். ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். 2013 பொதுநலவாய உச்சிமாநாட்டை அவர்கள் நடத்துகிறார்கள் என்பதையும் முன்னேற்றத்தை காண்பித்தால் அதிகமான நாடுகளை அவர்கள் வரவேற்க முடியும் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்' என பதிலளித்தார். ஆனால் பிரிட்டன் இம்மாநாட்டை பகிஷ்கரிக்குமா என்பது குறித்து கருத்துக்கூற அவர் மறுத்துவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’