வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 செப்டம்பர், 2011

முஸ்லிம் சமூகத்தினரின் குர்பானுக்கு எதிர்க்கவில்லை: மேர்வின் சில்வா


ண்மைக்காலமாக மிருக பலிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தொடர்பாடல் மற்றும் பொது உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வியாழக்கிழமை தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்ற போது, முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் குர்பானுக்கு எதிராக தான் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோருடன் தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார். இதன் போது, இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் குர்பானை நான் ஒரு போதும் தலையீடமாட்டேன் என குறித்த பள்ளிவாசலின் பேஷ் இமாம் அசாத் மௌலான உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் முன்னிலையில் மேர்வின் சில்வா உறுதியளித்தார். 'இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குர்பானுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாமியர்களினால் மேற்கொள்ளப்படும் குர்பானை நான் ஒரு போதும் எதிராக செயற்படமாட்டேன் என அவர் குறிப்பிட்டார். 'சட்டவிரோதமாக மாடுகளை அறுப்பவர்களின் கைகளையே வெட்டுவேன் என தெரிவித்தேன். சமயங்களுக்கிடையிலான ஒற்றுமை குழப்பும் நடவடிக்கையில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என 1802ஆம் ஆண்டு சிங்கள பெண்மனியினால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசலிலிருந்து உறுதியளிக்கிறேன்' என அமைச்சர் மேர்வின் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்தை ஐக்கிய தேசிய கட்சி விமர்சித்து மதங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி தெரிவித்தார். பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது அமைச்சர் மேர்வின் சில்வா எங்களுக்கு பக்கபலமாக இருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’