வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 செப்டம்பர், 2011

துணைப்படைகளை குறைக்கக் கோருகிறார் பிளேக்

துணைப்படைப் பிரிவு ஒன்றையும் கொண்டு, இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் கட்சி ஒன்று முன்னாள் போர் வலயமான வட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலரான றொபேர்ட் பிளாக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் உள்ள துணைப்படைகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஆனால் அவற்றை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரராகவும் பணியாற்றிய றொபேர்ட் பிளாக் அவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த தமிழ் கட்சிகளின் துணைப்படைகள் தொடருவது குறித்தும் அங்கு பேசினார். அவர்களின் ஆயுதங்களை களைவதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய பிளேக் அவர்கள், முக்கிய அரச ஆதரவு ஆயுதக் குழுவான ஈ பி டி பி அமைப்பு தற்போது வடக்கில் பகிரங்கமாக ஆயுதங்களை தரித்திருப்பதில்லை என்றும் கூறினார். இருந்த போதிலும் அவை குறித்து அவர் தனது கரிசனையை வெளிப்படுத்தினார். செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் இலங்கையில் செய்தியாளர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆழமான கவலையை வெளியிட்ட பிளேக் அவர்கள், மனித உரிமை நிலவரங்கள் குறித்த அமெரிக்காவின் சங்கடத்தை வெளிப்படுத்தினார். இலங்கைப் போரின் போது சர்வதேசச் சட்டங்களை மீறும் வகையில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து ஒரு பொறுப்புக் கூறல் இலங்கையில் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், நீண்ட கால நல்லிணக்கம், மிதிவெடி அகற்றல், பள்ளிக்கூடங்களை மீளக்க்கட்டுதல், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளித்தல் போன்ற பரந்துபட்ட விடயங்களில் அரசாங்கம் அக்கறைகாட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மனித உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ள இலங்கை அரசாங்கம், உரிமைகள் குறித்த தமது அர்ப்பணிப்புகளுக்கு நிகர் கிடையாது என்றும் அண்மையில் கூறியுள்ளது. ஆனால், சர்வதேச செயற்பாட்டாளர்கள் அந்தக் கருத்துடன் முரண்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’