தருஸ்மன் அறிக்கையை' ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுச்சபையிலும் இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.
' இந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நானும் (ஐ.நா.) பொதுச்சபைக் கூட்டத்திற்காக அடுத்த வாரம் நியூயோர்க் செல்லும்போதும் எமது எதிர்ப்பை தெரிவிப்போம்' என அவர் டெய்லி மிரருக்கு கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நடுநிலைமை விவகாரம் குறித்தும் நியூயோர்க்கில் இலங்கைத் தூதுக்குழுவினர் பேசுவர் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு சமர்ப்பித்த் அறிக்கையை அவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’