வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ஆப்கானில் அமெரிக்க தூதரகம், நேட்டோ தலைமையகம் மீது தாக்குதல்

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகளின் தலையகத்தை இலக்கு வைத்து இன்று தற்கொலை குண்து; தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. அதேவேளை பகுதிகளவு கட்டப்பட்ட கட்டடிமொன்றிலிருந்த ஆயுத பாணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது. காபூலிலுள்ள பிரித்தானிய கவுன்ஸில் அலுவலகம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு, சில வாரங்களில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி தாக்குதலையும் பிரிட்டனிடமிருந்து 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சுதந்திரம் பெற்றதையொட்டி தாம் நடத்தியதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற வன்முறைகளை நேட்டோ செயலாளர் நாயகம் அன்ட்ரெஸ் போஹ் ரஸ்முசென் கண்டித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பொறுப்பை நேட்டோவிடமிருந்து ஆப்கானிஸ்தான் படைகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைக்கு இதுவொரு சோதனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, 'பாதுகாப்பு நிலைவரத்தை கையாள்வதில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளின் ஆற்றலில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’