வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 செப்டம்பர், 2011

கேணல் கடாபிக்கு சர்வதேச பொலிஸார் பிடியாணை

ன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் மிகமுக்கியமாக தேடப்படும் நபர்களின் பட்டியலில் லிபிய அதிபர் கேணல் கடாபி உட்பட அவரது புதல்வர் சைப் அல்-இஸ்லாம் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் அப்துல்லா அல்-செனவ்ஸி ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை இன்டர்போலினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த 'செவ்வறிக்கை' பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக சர்வதேச பொலிஸின் பொதுச் செயலாளர் ரொனால்ட் கே.நொபிள் கருத்துத் தெரிவிக்கையில்... 'இந்த செவ்வறிக்கையானது எமது 188 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் லிபிய அதிபர் உட்பட அவரது சகாக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டவிரோதமானதாகும். ஆகையினாலேயே இந்த செவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் மிக முக்கிய நபர்களான கேணல் கடாபி உட்பட மேலும் இருவரும் எக்காரணம் கொண்டும் சர்வதேச எல்லைகளை தாண்ட முடியாது என்றும் சர்வதேச பொலிஸாரின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’