வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சிறைக்ககைதிகளும் மனிதர்களே - டலஸ்

சிறைச்சாலைக் கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலம் வந்துள்ளது. சிறைக்ககைதிகளும் மனிதர்களே. அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றது என்று இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும போகம்பறை சிறைச்சாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்தார்.
சிறைக் கைதிகள் புனருத்தாபனம் தொடர்பாக, சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு புனருத்தாபன அமைச்சர் சந்திரசிறி கஜதீர மற்றும் இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையே சிறைக்கைதிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வருடாந்தம் சராசரி ஒரு இலட்சம் பேர் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் அரைப்பாதியினர் அதாவது சுமார் ஐம்பதாயிரம் பேர் மீண்டும் மீண்டும் வருபவர்கள். இந்த ஐம்பதாயிரம் பேரை ஏதாவது ஒருவழியில் மீண்டும் அத்தவறைச் செய்யாதிருக்க ஒரு வழி தேவை. அடுத்தபடியாக உழைக்கக் கூடிய வேலைப்படையில் அங்கம் வகிக்கும் 18-50 இற்கும் இடைப்பட்டவர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர். அதேபோல் அதி விசேட திறன்களைக் கொண்டவர்களே சிறையில் அடைபட்டுள்ளர். எனவே ஆசியாவின் அற்புத நாடாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் சிறைகளில் முடங்கியுள்ள இந்த வளங்கள் பயன் படுத்தப்பட வேண்டும். தனியாக சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சினால் மட்டும் அதனைச் செய்யமுடியாது. இதற்காகவே மேற்படி இரு அமைச்சுக்களும் இணைந்து தொழில் வழிகாட்டுதல் தொடர்பான திறன்களை சிறைக் கைதிகளுக்கு வழங்கி அவர்களுக்கு சுயதொழில் அல்லது சரடவதேந அரங்கில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சான்றிதழ்களை வழங்கவே இவ் ஒப்பந்தம் கைசாத்திடப் பட்டது. பல்வேறு மட்டங்களையும் கொண்ட என்.வீ.கியூ. (தேசிய தொழிற்கல்வித்துறை தகைமை) என்ற சான்றிதழ் வழங்கப்படும். இதில் 7வது மட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமான தராதரத்தைப் பெறுவர். 6வது மட்டத்தைப் பூர்த்தி செய்பவர்கள் டிப்ளோமா தராதரத்தைப் பெறுவர். இவ்வாறு புனருத்ததாபனம் செய்யத் திட்ட மிட்டுள்ளளோம் என்றார். பயங்கரவாதம், பதுங்குகுழி, மனித வெடிகுண்டு, எல்லைக் கிராமம் முதலான சொற்கள் கடந்த முப்பது வருடமாக இலங்கை அகராதியில் சேர்க்கப் பட்டிருந்தன். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையை அடுத்து அது எமது அகராதியில் இருந்து அவ்வாறான சொற்கள் அகற்றப்பட்டு விட்டன என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’