வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய உள்கட்டமைப்பு அபிவிருத்திகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட யுத்தத்தின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கலந்துரையாடினார்.
நேற்றுமுன் தினம் சனிக்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலையமைகத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அதேவேளை ஐ.நா. நிபுணர் குழு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி பேணப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட நல்லிணக்க செயன்முறைகளை துரிதப்படுத்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றங்கள் குறித்து பான் கீ மூன் திருப்தியடைந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இருவரும் சந்தித்தபோது, ஐ.நா.வின் நிபுணர் குழுவானது விசாரணைக் குழுவாக அல்லாமல் ஆலோசனைக் கூறுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதென பான் கீ மூன் உறுதியளித்திருந்ததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுபடுத்தினார். 2010 ஆம் ஆண்டு கூட்டத்தின்போதான குறிப்பை இலங்கைக் குழுவினர் அப்படியே வாசித்துக் காட்டினர். வழங்கப்பட்ட வாக்குறுதியானது நிபுணர் குழுவினால் மதிக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். நியூயோர்க்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்படாமல் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையானது மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி புகார் தெரிவித்தார். இது தொடர்பான ராஜதந்திர சம்பிரதாயம் மீறப்பட்டமை குறித்து ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்ததுடன் இது ஐ.நா. முறைமை மீதான நம்பகத்தன்மையை தாழ்த்துகிறது எனவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’