வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 செப்டம்பர், 2011

கர்நாடகமும் இந்துஸ்தானியும் ஒன்றிணைந்த செவ்விசைமாலை

டமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தென்பகுதி மற்றும் வடபகுதி இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங்கிய செவ்விசைமாலை இசை நிகழ்ச்சியில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வ டமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நல்லூர் நடராஜா - பரமேஸ்வரி மணி மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்ற இச் செவ்விசைமாலை நிகழ்வில் இசைக் கலைஞர்கள் கர்நாக இசையையும் ஹிந்துஸ்தானிய இசையையும் ஒன்றிணைத்து இசைமழை பொழிந்தனர். அங்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையுரையாற்றும் போது தமிழர்களின் பாரம்பரியமிக்க இசை வடிவமாக கர்நாடக இசை இருப்பதாகவும் சிங்கள மக்களின் இசை வடிவமாக இந்துஸ்தானி இசை இருப்பதாகவும் இவ்விரண்டினையும் இணைத்த ஒரு நிகழ்வாக இந்நிகழ்வு அமைகிறது எனத் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான இசை நிகழ்வுகள் வடமாகாண சபையால் 03 மாதங்களுக்கு ஒரு தடவை நடத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து சிங்களக் கலைஞர்களான கலாநிதி நிர்மலா குமாரி மற்றும் சரத்குமார லியனவத்த ஆகியோரின் தனி நிகழ்வைத் தொடர்ந்து இணைந்து இசைவிருந்தினை கலைஞர்கள் படைத்தனர். இதில் சுந்தரமூர்த்தி கோபிதாஸ் வாகீசன் லோகேந்திரன் ஆகியோருடன் பேசலா மனோஜ்ஜூம் சரத்குமார லியனகேயும் இணைந்து கொண்டார். இதன் போது இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் யாழ் தூதரக துணைத் தூதுவர் ரகுராம் வடமாகாண ஆளுநரின் செயலாளரும் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான இளங்கோவன் உள்ளிட்ட துறைசார்ந்தோருடன் இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் நிகழ்வில் பங்கெடுத்த கலைஞர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’