வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

கவிஞர்கள் மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வருகின்றனர் - கம்பவாரிதி

விஞர்கள் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருபவர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்ற கலையழகி வரதராணியின் கல்லுக்கு உயிர்வந்தால் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கல்வியாளர்களை விடவும் அறிவாளிகளை விடவும் கவிஞர்களே உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதுடன் கவிஞர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் கொண்டு வரமுடியும். தான் வாழும் சமூகத்தை உற்றுநோக்கி அந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் நல்ல தரிசனத்துடன் கவிஞர்களின் படைப்புக்கள் அமையவேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விலை மதிக்க முடியாத உயிர்பலிகளை நாம் கொடுத்துள்ள போதிலும் நமது எதிர்கால சமுதாயம் இனிமேலும் இவ்வாறு அவலப்படாமல் வாழ்வதற்கு ஏதுவாக படைப்புக்கள் ஊடாகவோ வேறு மார்க்கங்களுக்கூடாகவோ சத்தியத்தையே முன்னிறுத்தி செயற்படவேண்டும். சமூகமாற்றத்தை கொண்டு வர வேண்டியவர்கள் கவிஞர்கள் என்பதுடன் கவிதைக்கான வித்து கலையழகி வரதராணியிடம் உண்டு எனவும் அதை மேன்மேலும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் கவிதையே எமக்கு கிடைத்த சிறப்புக் கொடை எனவும் தெரிவித்தார். முன்பதாக விழா மண்டபத்தில் அதிதிகள் மங்கல விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் அறிமுகத்தை எழுத்தாளர் அந்தனிஜீவாவும் வாழ்த்துரையை கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் சந்திரசேகரன் சசிதரனும் கௌரவ அதிதிக்கான உரையினை ஞாயிறு வீரகேசரி மற்றும் மெற்றோ நீயூஸ் பிரதம ஆசிரியர் தேவராசும். நூல் நயவுரைகளை டாக்டர் தாஸீம் அஹமது மற்றும் எழுத்தாளர், விமர்சகர் தெளிவத்தை ஜோசப் ஆகியோர் நிகழ்த்தினார். கல்லுக்கு உயிர்வந்தால் கவிதை நூலின் முதற்பிரதியை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிற்பித்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் முத்தையா ஜெகன்மோகன் பாலச்சந்திரசர்மா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டதுடன் நூல் ஆசிரியருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கட்டுப்பாட்டாளர் கலிஸ்டாலூக்கஸ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந் நிகழ்வில் கலை இலக்கிய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’