ச மூக நலனை முன்னிறுத்தியதாக உயர்மட்ட பாதுகாப்பு குழு செயற்படுமெனவும் அதற்கு எல்லோரது ஒன்றிணைந்த ஒத்துழைப்பும் ஒத்தாசையும் முக்கியமானது எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக உயர்மட்ட சிவில் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் மாகாண ஆளுநரின் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற போது அதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசின் கொள்கையை பிரதிபலிக்கும் விதமாக உண்மையின்படி நடக்கவே இக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்மட்டப் பாதுகாப்புக்குழு சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி அதுசார்ந்து செயற்படவிருப்பதால் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இக்குழு பொய்மைத் தன்மையுடன் இயங்கமுடியாது எனவும் மக்களுக்கு மர்மமனிதர்களால் பிரச்சினைகள் தோன்றுமிடத்து அதனை பிரதேச செயலர்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் இங்கு வெளியாகும் பத்திரிகைகள் மர்ம மனிதர்களின் செயற்பாடுகளை பூதாகாரப்படுத்தி தமக்கு அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைiமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குடாநாட்டில் அன்மைய நாட்களில் மர்மமனிதர்களின் நடமாட்டம் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களிடமும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளிடமும் கேட்டறியப்பட்டது. முக்கியமாக நவாலிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சுட்டிக்காட்டியதை அடுத்து, அச்சம்பவம் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் விசாரணைகள் உடன் ஆரம்பிக்கப்படுமெனவும் அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவுகளில் விழிப்புக்குழுக்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் மண்டைதீவு சந்திப்பில் நிரந்தரமான பொலிஸ் காவலரண் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் அத்தியட்சகர் இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் மனித உரிமை ஆர்வலர்கள் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’