தா யும், மகளும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறந்த பெண்ணின் டைரியை போலீசார் கைப்பற்றினர். திருத்தணி அருகே தும்பிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி நதியா (25). இவர்களது மகள் சுஷ்மிதா (4). திருத்தணி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார் விஜயகுமார். கிராமத்துக்கு போய்வர சிரமமாக இருந்ததால், திருத்தணி பெரிய தெருவில் வாடகை வீட்டில் 6 மாதத்துக்கு முன்பு குடியேறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்றிருந்த விஜயகுமார், நள்ளிரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மின் விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவையில் நதியாவும் சுஷ்மிதாவும் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவரது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர். இதுபற்றி திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் விசாரித்தனர். நதியாவுக்கும் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்துள்ளது. அவர்களுக்குள் அடிக்கடை சண்டை நடந்துள்ளது. அப்போது நதியாவை கொன்று விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதுபற்றி டைரியில் நதியா எழுதி வைத்துள்ளார். அந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். டைரியில், ‘‘என்னிடம் தகராறு செய்தால் பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன். உன்னுடைய வாழ்க்கையை சீரழித்து விடுவேன். குழந்தையை கடத்தி கொன்று விடுவேன்’ என்று பக்கத்து வீட்டு பெண் மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று நதியா எழுதி வைத்துள்ளார். வீட்டின் சுவரிலும் பென்சிலால் அந்தப் பெண்ணை பற்றி எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’