நடிகை காந்திமதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த காந்திமதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை வடபழனியில் வசித்துவந்தார். 2000-ம் ஆண்டு இதயநோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காந்திமதி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். 300-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று அவரது வளர்ப்பு மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’