வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 செப்டம்பர், 2011

விளக்கமறியலில் இருந்து செயற்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குனர்

பர் ஒருவர் விளக்கமறியலில் இருந்துகொண்டே, ஜப்பான் மற்றும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றியதை குருநாகல் குற்றவியல் பிரிவு பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அளவ்வ மற்றும் வாரியபொலவைச் சேர்ந்த இரு நபர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக குருநாகல் குற்றவியல் பிரிவின்பொறுப்பதிகாரி வில்வலஆரச்சி தெரிவித்துள்ளார். இச்சந்தேக நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த ரொஷான் மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக விளக்கமறியலில் இருந்தபோது தனது நண்பர்களுக்கூடாக இம்மோசடியை மேற்கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர். போரளை மற்றும் பொதுஹர பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளையைச் சேர்ந்த மேற்படி பெண் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக கைது செய்யப்பட்டவர் எனவும் அவர் பிரதான சந்தேக நபருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், விடுதலையானவுடன் அந்நபரின் நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பெண்ணின் பெயரில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்ததாகவும் அண்மையில் அப்பணம் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’