ஜெ னீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள எந்த ஒரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்த்து இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ணவிடம், சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவோ உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது, தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இலங்கையின் சுதந்திரம், இறைமையை சீனா மதிக்கிறது. அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவிபுரிய முன்வருவோம், எதிர்வரும் வாரங்களில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்போது சீனா இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் என சீன அதிபர் உறுதியளித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’