வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 செப்டம்பர், 2011

நல்லூர்த் திருவிழாவில் காணாமல்போன சிறுமி கண்டுபிடிப்பு

யாழ். நல்லூர்த் திருவிழாவின்போது காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கோப்பாய்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கோப்பாய் தெற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருபாலையைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமியே காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ். நல்லூர்க் கந்தசாமி கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான பூங்காவனத் திருவிழாத் தினமான கடந்த மாதம் 29ஆம் திகதி தனது பெற்றோருடன் குறித்த சிறுமி கோவிலுக்குச் சென்றபோது காணாமல்போயிருந்தார். வாகனத்தில் வந்தவர்கள் கோப்பாய் தெற்கு பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலடியில் குறித்த சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றதாகவும் சிறுமியின் கையில் வீட்டு முகவரியை எழுதிவிட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி அப்பகுதியில் அழுதுகொண்டிருந்ததைக் கண்ட சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் அச்சிறுமியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’